வெள்ளி, 7 ஜனவரி, 2011

pot decoratives


தேவையான பொருட்கள்:

எம்-சீல்(M-seal white)
கோல்ட் பவுடர்(gold powder -fevickryl)
அலுமினியகம்பி( wire)
ப்ரவுன் ஃப்ளோரல் டேப்(brown floral tape)
சோளமாவு(எம் சீல் கையில் ஒட்டாமல் இருப்பதற்கு)(corn flour)
ஸ்பாஞ்ச்(ஒன்றோடொன்ன்று ஒட்டாமல் காயவைப்பதற்கு)-sponge

செய்முறை:
முதலில் எம்சீலை நன்றாக கலந்துக்கொள்ளவும்,கைகளில் ஒட்டாமல் இருக்க அவ்வப்போது சோளமாவை தடவிக்கொள்ளவேண்டும். அலுமினிய கம்பிகளை நீளமாக 6,7 வெட்டிக்கொள்ள வேண்டும், சிறியதாக 20,25 வெட்டிகொள்ள வேண்டும். இப்பொழுது சிறியதாக வெட்டியுள்ளதில் எம் சீலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஸ்பாஞ்சில் சொருகி காய விட வேண்டும். நன்றாக காய்ந்ததும்  கோல்ட் பவுடரை வார்னிஷில் கலந்து கலர் கொடுக்கவும் (அல்லது முதலில் கருப்பு ஃபேப்ரிக் கலர் அடித்து லேசாக ஆறவிட்டு கோல்ட் பவுடரை ப்ரஷின் உதவியால் தூவவும்). கோல்ட் கலர் அடித்து நன்றாக காய்ந்ததும்  பெரிய கம்பிகளில்  ப்ரவுன் ஃப்ளோரல் டேப்பால் இணைக்கவும். இப்பொழுது  பானையில் அடுக்கவும்.
அழகிய பூச்சாடி தயார். 

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

Oil painting 3
தேவையான பொருட்கள்:
ஆயில் கலர்ஸ்(oil colors)
பேலட்(pallet)
பேலட்கத்தி(pallet knife)
லின்சீட் ஆயில்(linseed oil)
கேன்வாஸ் (canvas board)
ப்ரஷ்(brush filbert, round, flat)

செய்முறை:
முதலில் கேன்வாஸ் போர்டில் தேவையான படத்தை பென்சிலில் வரைந்துக்கொள்ள வேண்டும். பேலட்டில் பூக்களுக்கு மஞ்சள் 3 விதமான ஷேடில் பேலட்கத்தியின் உதவியால் கலந்து வைத்துக்கொள்ளவும்(ப்ரஷில் கலந்தால் முக்கால்பாகம் ப்ர்ஷிலேயே ஒட்டிக்கொள்ளும்), பின்பு இலைகளுக்கு பச்சையில் 2 அல்லது 3 ஷேடில் கலந்து வைக்கவும். இப்பொழுது மெதுவாக கேன்வாசில் வரைந்து வைத்துள்ள படத்தில் டார்க் மற்றும் லைட் ஷேடில் பூக்களுக்கும், இலைகளுக்கும் கல‌ர் கொடுக்கவும்.

குறிப்பு:
ஆயில் பெயிண்ட் ரொம்ப திக்காக இருந்தால் லின்சீட் ஆயில் சிறிது சேர்த்து கலக்கவும்(அதாவது ஃபேப்ரிக் பெயின்டில் மீடியம் உபயோகிப்பது போல் ஆயில் பெயின்டிங்கில் லின்சீட் ஆயிலை பயன்படுத்தவும்).

Arts and crafts only

LinkWithin

Blog Widget by LinkWithin