
சோப் ஃப்ளவர்
தேவையான பொருட்கள்:
விதவித மான நிறங்களில் சோப்
ஃபெவிகால்
கார்ன்ஃப்ளோர்
கேரட் துருவி
கிரீன் ஃப்ளோரல் டேப்
அலுமினிய கம்பி
கண்ணாடி டம்ளர் (அ) பூ ஜாடி
செய்முறை:
மஞ்சள் (அ) சிவப்பு
வெள்ளை (அ) பிங்க்
இந்த கலர்களில்(தேர்ந்தெடுத்து) பூக்கள் செய்தால் மிகவும் அழகாக இருக்கும். சோப்பை நன்றாக துருவிக்கொள்ளவும்.அதில் 3:1 என்ற விகிதத்தில் கார்ன்ஃ்ளோரை சேர்த்து ஃபெவிகாலை விட்டு கலந்துக்கொள்ளவும். இப்பொழுது ரோஜாப்பூ போல் ஒவ்வொரு இதழாக செய்து அலுமினிய கம்பியில் அடுக்கவும்.பச்சை சோப்பை கொண்டு இலைகள் போல் செய்யலாம் (அ) செயற்கை இலைகளை கொண்டும் அலங்கரிக்கலாம்.காம்பிற்கு பச்சை ஃபோளோரல் டேப்பைக்கொண்டு சுற்றவும். இப்பொழுது ரோஜாக்களை கண்ணாடி டம்ப்ளர் அல்லது பூ ஜாடியில் வைக்கலாம். கண்ணாடி டம்ப்ளரில் வைத்தால் துருவிய சோப்பை அதில் நிரப்பி ரோஜாக்களை அடுக்கலாம்.


