Thursday, July 9, 2009

குந்தன் பூச்செடி





தேவையான பொருட்கள்:

கலர் குந்தன்கள்
கோல்டன்கலர் கம்பிகள்
செயற்கை இலைகள்
அலங்கரிக்க பூச்சாடி
ஃப்ளோரல் டேப்
கத்தரிக்கோல்
மகரந்தம் (தேவைப்பட்டால்)

செய்முறை:

முதலில் கோல்டன் நிற கம்பிகளை தேவையான அள‌விற்கு ஒரே அளவாக 5 கம்பிகளை வெட்டிகொள்ளவும்.
குந்தன் கற்களில் இரு ஓட்டைகள் இருக்கும், முதல் ஓட்டையில் கம்பியை நுழைத்து வெளியே இழுத்து முறுக்கி விடவும். பின் இன்னொரு ஓட்டையில் கம்பியை நுழைத்து காம்பாக இழுக்கவும். இவ்வாறு ஒவ்வொரு பூவுக்கும் 5 கற்களில் இதேபோல் செய்து ஒன்றாக பூ போல் இணைக்கவும். (தேவையானால் மகரந்தத்தை இணைக்கவும்.)15 அ 20 பூக்கள் செய்தபிறகு கம்பியில் ஃப்ளோரல் டேப்பை சுற்றி இலைகளையும் பூக்களையும் இணைத்து செடிபோல் செய்து பூச்சாடியில் அலங்க‌ரிக்கவும்.





LinkWithin

Blog Widget by LinkWithin