
தேவையான உபகரணங்கள்
கம்பிகள்
நூல்
ஆர்கண்டி துணி (விரும்பிய நிறத்தில்)
பச்சை செல்லோடேப்
கத்தரிகோல்
பிளாஸ்டிக் இலைகள்
செய்முறை
முதலில் துணியை முதல் படத்தில் உள்ளவாறு வெட்டிக்கொள்ளவேண்டும்.(ஒரு ரோஜாவிற்கு ஆறு துண்டுகள்)
பின்பு ஓரங்களில் சுருட்டிக்கொள்ள வேண்டும் (குச்சி வைத்து).
நடுவில் மட்டும் ஒரு துண்டை மடித்து நூலில் கட்ட வேண்டும்.
மீதியுள்ள இதழ்களை ரோஜாபூக்கள் மாதிரி அடுக்கி நூலில் இறுக்கி கட்ட வேண்டும்.
பின்பு பிளாஸ்டிக் இலைகளை இணைக்கவேண்டும்.
இதேபோல் மீதியுள்ள ரோஜாக்களையும் செய்தபிறகு காம்பிற்கு கிரீன் செல்லோடேப் ஓட்ட வேண்டும்.