
இந்த பெயிண்ட் சற்று வித்யாசமாக மெட்டாலிக்கலர், பியர்ல்கலரில் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது. நீங்களும் முயற்சித்து பாருங்கள். வாழ்த்துக்கள்.
தேவையான பொருட்கள்:
எம்பாஸ் சொல்யூஷன்
பியர்ல் கலர்ஸ்
மெட்டாலிக் கலர்ஸ்
எம்பாஸ் கலர்ஸ்
ப்ரஷ் 0, 2
வெல்வெட் துணி 1 மீட்டர்
வரைவதற்கு தேவையான ஃபோட்டோ டிசைன் 1
மஞ்சள் கார்பன்
அயர்ன்பாக்ஸ்
செய்முறை:
முதலில் வெல்வெட் துனியில் தேவையான படத்தை மஞ்சள்கார்பன் வைத்து ட்ரேஸ் செய்து கொள்ளவும்(ராஜஸ்தானி ஃபோட்டோஸ் பொருத்தமாக இருக்கும் அ பூக்கூடை டிசைனும் நன்றாக இருக்கும்)ட்ரேஸ் செய்த இடத்தில் எம்பாஸ்சொல்யூஷனை தடவி 24 மணி நேரம் காய விடவும், காய்ந்த்ததும் பின்புறம் திருப்பி அயர்ன் செய்யவும். இப்பொழுது சற்று மேலெழும்பி(எம்பாஸ்)இருக்கும்.



