Friday, January 7, 2011
pot decoratives
தேவையான பொருட்கள்:
எம்-சீல்(M-seal white)
கோல்ட் பவுடர்(gold powder -fevickryl)
அலுமினியகம்பி( wire)
ப்ரவுன் ஃப்ளோரல் டேப்(brown floral tape)
சோளமாவு(எம் சீல் கையில் ஒட்டாமல் இருப்பதற்கு)(corn flour)
ஸ்பாஞ்ச்(ஒன்றோடொன்ன்று ஒட்டாமல் காயவைப்பதற்கு)-sponge
செய்முறை:
முதலில் எம்சீலை நன்றாக கலந்துக்கொள்ளவும்,கைகளில் ஒட்டாமல் இருக்க அவ்வப்போது சோளமாவை தடவிக்கொள்ளவேண்டும். அலுமினிய கம்பிகளை நீளமாக 6,7 வெட்டிக்கொள்ள வேண்டும், சிறியதாக 20,25 வெட்டிகொள்ள வேண்டும். இப்பொழுது சிறியதாக வெட்டியுள்ளதில் எம் சீலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஸ்பாஞ்சில் சொருகி காய விட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கோல்ட் பவுடரை வார்னிஷில் கலந்து கலர் கொடுக்கவும் (அல்லது முதலில் கருப்பு ஃபேப்ரிக் கலர் அடித்து லேசாக ஆறவிட்டு கோல்ட் பவுடரை ப்ரஷின் உதவியால் தூவவும்). கோல்ட் கலர் அடித்து நன்றாக காய்ந்ததும் பெரிய கம்பிகளில் ப்ரவுன் ஃப்ளோரல் டேப்பால் இணைக்கவும். இப்பொழுது பானையில் அடுக்கவும்.
அழகிய பூச்சாடி தயார்.
Labels:
pot decoratives,
potpainting
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சூப்பர்...நல்லா இருக்குது...தங்கப்பூச்செடி
thanks thamizh paravai..
விளக்கமும் முதலிலேயே கொடுத்துவிட்டேன்... படம் மட்டும் போடுவதென்றால் ஈஸியாக இருக்கிறது அவ்வளவே....
அழகா இருக்கு தர்ஷினி! பொறுமையா பண்ணறீங்க ஒவ்வொண்ணும்!
thanks mahi...
Post a Comment