பானைக்கு முதலில் கறுப்பு ஃபேப்ரிக் கலர் கொடுத்து காயவிடவேண்டும்.காய்ந்ததும் பிங்க் பியர்ல் கலர் கொடுத்து(தேவைப்பட்டால் மீடியம் சேர்த்துக்கொள்ளலாம்) ஜாயிண்ட் இடங்களைதவிர மீதி இடங்களில் அடித்து கொள்ளலாம். காயவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பானை ரெடி.
மேலும் இது மினியேச்சர் ரோஸ் என்பதால் சிறு விளக்கத்துடன்....
க்ளேவை 5 பாகமாக பிரித்து வைத்துக்கொள்ளவும். மேலும் இந்த 5 பாகத்தை ஒவ்வொரு பாகத்தையும் இரண்டாக பிரித்து சிவப்பு டார்க் மற்றும் லைட் ஷேட் கலர் கொடுத்து பிசைந்து வைத்துக்கொள்ளவும் இவ்வாறு மீதியுள்ள க்ளேவிற்கும் எந்த கலர் தேவையோ இரண்டு ஷேட் கலர் கொடுத்து ஸிப்லாக் கவரில் வைத்துகொள்ள வேண்டும்.
தேவைப்படும் போது எடுத்து ரோஜாப்பூக்கள் செய்துக்கொள்ளலாம்.
முதலில் சிறிது எடுத்து திலகம் போல் உருட்டி கொள்ள வேண்டும்.இன்னொரு சிறு உருண்டை எடுத்து தட்டையாக்கி அந்த திலகத்தின் மேல் ஒட்டினால் இதழ் போல் இருக்கும் இவ்வாறுஒன்ரின் மேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டே வரவேண்டும்.இப்படியே அனைத்து ரோஜாக்களும் செய்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒவ்வொரு பானைக்கும் ஒரேகலரில் உள்ள ரோஜாக்களை 4,5 அடுக்கலாம்.
பார்ப்பதற்கு அழகான கண்ணைகவரும் பானை மற்றும் ரோஜாக்கள் ரெடி.
8 comments:
அழகா இருக்கு தர்ஷினி! ரோஜாக்களும், பானையை அடுக்கி வைத்திருப்பதும் நன்றாக இருக்கு.
பலநாட்கள் கழித்து வந்திருக்கீங்க.எப்படி இருக்கீங்க?
ரொம்ப அழகா இருக்கு.
நலமே.நன்றி மஹி.
நன்றி சுந்தரா.
அழகான கைவேலை தர்ஷினி.
நன்றி இமா வருகைக்கும், வாழ்த்திற்கும். :)
தர்ஷினி நான் மஹி தள வழி வந்தேன். வாவ் சூப்பர் தர்ஷினி.பானயும், ரோஸும் அழகு.
நான் உங்களை தமிழ் குடும்பத்தில் உங்க கைவண்ணங்களை எல்லாம் பார்த்திருக்கேன். எல்லாமே அழகு.
nice roses dharshini...keep it up
//Vijiskitchen கூறியது...
தர்ஷினி நான் மஹி தள வழி வந்தேன். வாவ் சூப்பர் தர்ஷினி.பானயும், ரோஸும் அழகு.
நான் உங்களை தமிழ் குடும்பத்தில் உங்க கைவண்ணங்களை எல்லாம் பார்த்திருக்கேன். எல்லாமே அழகு.//
நன்றி விஜி.
// தமிழ்ப்பறவை கூறியது...
nice roses dharshini...keep it up//
நன்றி தமிழ்பறவை..
Post a Comment