Monday, July 13, 2009

பானை அலங்காரம் 2



தேவையான பொருட்கள்:

மண்பானை 1
கறுப்பு எனாமல் கலர்
ப்ரஷ்
செராமிக் பவுடர்
பாலித்தீன் கவர்(கோன் செய்ய)
வார்னிஷ்
ஃபெவிக்கால்
தண்ணீர் சிறிது
வேஸ்ட் துணி

செய்முறை:

பானைக்கு கறுப்பு எனாமல் கலர் அடித்து காயவிடவும். செராமிக் பவுடரில் ஃபெவிகாலை சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்திமாவுபததிற்கு வந்ததும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலக்கவும் இப்பொழுது பாலித்தீன் கவரை கோன்போல் செய்த்துக்கொண்டு அதில் இந்த கலவையை ஊற்றி ரப்பர் பேண்ட் போட்டு கட்டவும். அல்லது பின் செய்து செல்லோடேப்பால் ஒட்டவும்.
பானை காய்ந்ததும் எனாமல் பெயின்ட் காய்ந்ததும் கோனை உபயோகப்படுத்தி நம் கற்பனைக்கு ஏற்றவாரு படத்தை வரைந்துகாய்ந்ததும் வார்னிஷ் அடித்து அலங்கரிக்கலாம்.

No comments:

LinkWithin

Blog Widget by LinkWithin