Tuesday, March 31, 2009

சோப் ஃப்ளவர் 1&2



சோப் ஃப்ளவர்

தேவையான பொருட்கள்:

விதவித மான நிறங்களில் சோப்
ஃபெவிகால்
கார்ன்ஃப்ளோர்
கேரட் துருவி
கிரீன் ஃப்ளோரல் டேப்
அலுமினிய கம்பி
கண்ணாடி டம்ளர் (அ) பூ ஜாடி

செய்முறை:

மஞ்சள் (அ) சிவப்பு
வெள்ளை (அ) பிங்க்
இந்த கலர்களில்(தேர்ந்தெடுத்து) பூக்கள் செய்தால் மிகவும் அழகாக இருக்கும். சோப்பை நன்றாக துருவிக்கொள்ளவும்.அதில் 3:1 என்ற விகிதத்தில் கார்ன்ஃ்ளோரை சேர்த்து ஃபெவிகாலை விட்டு கலந்துக்கொள்ள‌வும். இப்பொழுது ரோஜாப்பூ போல் ஒவ்வொரு இதழாக செய்து அலுமினிய கம்பியில் அடுக்கவும்.பச்சை சோப்பை கொண்டு இலைகள் போல் செய்யலாம் (அ) செயற்கை இலைகளை கொண்டும் அலங்கரிக்கலாம்.காம்பிற்கு பச்சை ஃபோளோரல் டேப்பைக்கொண்டு சுற்றவும். இப்பொழுது ரோஜாக்களை கண்ணாடி டம்ப்ளர் அல்லது பூ ஜாடியில் வைக்கலாம். கண்ணாடி டம்ப்ளரில் வைத்தால் துருவிய சோப்பை அதில் நிரப்பி ரோஜாக்களை அடுக்கலாம்.


29 comments:

thamizhparavai said...

ரோஜா இதழ்கள் நுணுக்கமாக , மடிப்புகளோடு அழகாயுள்ளது.சோப்பில் கூடவா என வியக்கிறேன்.வாழ்த்துக்கள்.இவ்வளவு நேரம் உங்களுக்கு இருக்கா...?!

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

அழகான செய்முறை விளக்கம்.

பாசகி said...

உங்க பதிவெல்லாம்(படைப்பெல்லாம்) பார்த்துட்டு பாராட்டாம போகமுடியல... You're highly creative and talented. Best Wishes!

dharshini said...

நன்றி தமிழ்பறவை,வருகைக்கும் வாழ்த்திற்க்கும். ஓவியங்களை போலவேதான் இதுவும் practice பண்ண பண்ண அழகாவரும்,real rose மாதிரி பண்ணனும்னுதான் என் ஆசை.

dharshini said...

நன்றி கடையம் ஆனந்த் வாழ்த்திற்கு.
செய்முறை விளக்கம் நல்லாயிருக்கா?! சரி பெரியவங்க சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான். :)

dharshini said...

நன்றி பாசகி முதல் வருகைக்கும், வழ்த்திற்கும்.

Anonymous said...

dharshini கூறியது...

நன்றி கடையம் ஆனந்த் வாழ்த்திற்கு.
செய்முறை விளக்கம் நல்லாயிருக்கா?!
//
ரொம்ப நல்லாயிருக்கு.
//
சரி பெரியவங்க சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான்.:)
//
நான் பெரியவனா? நான் ரொம்ப சின்ன பையன்ங்க?

நாகை சிவா said...

உங்க பதிவு ரொம்பவே அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள்.

தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எழுதவும். :)

Unknown said...

// நான் பெரியவனா? நான் ரொம்ப சின்ன பையன்ங்க? //

சரி நம்பிட்டங்க!

Unknown said...

நன்றி நாகை சிவா முதல் வருகைக்கும், வாழ்த்திற்க்கும்.

கார்க்கிபவா said...

வாவ்.. சூப்பர்

dharshini said...

thanks karki anna.

Unknown said...

மிகவும் அருமையாக இருக்கு தர்ஷினி.
தெளிவான செய்முறை விளக்கங்கள்

dharshini said...

நன்றி faizakadir medam உங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.

அகநாழிகை said...

தர்ஷினி,
வணக்கம். உங்கள் கலைப் பதிவுகள் அனைத்தும் பார்த்தேன், ரசித்தேன். அம்மா பற்றிய கவிதை நன்று.
கலைப் படைப்புகளை மட்டுமே ஒரு பதிவில் நான் பார்ப்பது இதுதான் முதல் முறை. நான் ஐந்து ஆண்டுகள் அரசு கைவினைப் பொருள் கூடத்தில் பணி புரிந்திருக்கிறேன். பெரும்பாலான கலைப் பொருட்களைப் பற்றி ஓரளவிற்கு அறிந்திருக்கிறேன். எனது எந்தப் பதிவிலும் கூறியதில்லை, கண்ணாடி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், லிங்கம் ஓவியம், வைக்கோல் ஓவியம், ஆலிலை ஓவியம் என விதவிதமான கலைப்பொருட்களுடன் தினந்தோறும் இருந்த கணங்களை நினைவூட்டி விட்டீர்கள். நன்றி,
(இப்படைப்புகளை என்ன செய்கிறீர்கள் என அறியலாமா ?)

Unknown said...

அக நாழிகை உங்கள் வருகைக்கு நன்றி..வைக்கோல்,லிங்கம் ஓவியத்தை பற்றி நான் கேள்வி பட்டதில்லை.ஆனால் ஆலிலை ஓவியம் வரைந்திருக்கிறேன்.இன்னும் பதிவேற்றவில்லை. அனைத்தும் என்னிடமே உள்ளன(இப்படைப்புகள்!)

தேவன் மாயம் said...

மிக அழகாக இருக்குங்க!!

தேவன் மாயம் said...

பொருமையுடன் எப்படி செய்கிறீர்களோ!
உங்கள் அனைத்து படைப்புகளும் அருமை!

ஆதவா said...

உங்கள் வலையே வித்தியாசமாக இருக்கிறது!! சகோதரி

நீல பொட்டுகள் ஒழுகுவதைப் போலவோ, முட்டைகள் ஒன்றொடொன்று சமரிட்டு சிதறி ஓடுவதைப் போன்றோ இருக்கிறது!! அதற்கு மத்தியில் ஓவியங்களும் கலைசிற்பங்களும் க்ராஃப்ட் வேலைகளும் பலே!!!

நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்களை இன்னுமின்னும் அதிகமாக வணங்குகிறேன்!!!

அன்புடன்
ஆதவா

KABEER ANBAN said...

மிகவும் நன்றாக வந்துள்ளன ரோஜாக்கள். பாராட்டுகள்.

கார்ன்ஃப்ளோர்+சோப்புத்துருவல்+ ஃபெபிகால் : மிகவும் புதுமையான கலவை. கார்ன்ப்ளோருக்கு பதிலா அரிசி மாவு சேர்த்துக்கிட்டா என்ன ஆகும்?

ரொம்ப ஆராய்ச்சி செய்யிறேனோ :))

dharshini said...

thevan mayam, aathavaa, kabeeranban sir, தங்கள் வருக்கைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

dharshini said...

//ஆதவா கூறியது...

உங்கள் வலையே வித்தியாசமாக இருக்கிறது!! சகோதரி

நீல பொட்டுகள் ஒழுகுவதைப் போலவோ, முட்டைகள் ஒன்றொடொன்று சமரிட்டு சிதறி ஓடுவதைப் போன்றோ இருக்கிறது!! அதற்கு மத்தியில் ஓவியங்களும் கலைசிற்பங்களும் க்ராஃப்ட் வேலைகளும் பலே!!!//

உங்கள் பின்னுட்டமே வித்யாசமாக இருக்கிறது அண்ணா!

dharshini said...

kabeeranban said
//கார்ன்ப்ளோருக்கு பதிலா அரிசி மாவு சேர்த்துக்கிட்டா என்ன ஆகும்?//


அரிசி மாவில் செய்தால் நன்றாக வருமா என்று தெரியவில்லை கபீரன்பன் சார்.. முயற்சி செய்துவிட்டு சொல்கிறேன்...

Unknown said...

ரொம்ப அழகா இருக்கு தர்ஷினி பூ எல்லாம் :)))) Great.. :))

அன்புடன் அருணா said...

பொறுமையின் மகாராணி என்ற பட்டத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன் தர்ஷிணி...அத்தனையும் அருமை...
அன்புடன் அருணா

Sasirekha Ramachandran said...

very creative and beautiful work!!!

dharshini said...

thanks srimathi.

dharshini said...

thanks aruna medam
(ஹப்பா மேடமே சொல்லிட்டாங்க!)
thanks sasireka.

LinkWithin

Blog Widget by LinkWithin