Thursday, September 2, 2010
பானை அலங்காரம் 4
பானை அலங்காரம் 4
தேவையான பொருட்கள்:
மண்பானை 1
ஃபெவிக்கால்
டிஷ்யூ பேப்பர்
தண்ணீர்
கருப்பு(ஃபேப்ரிக் கலர்)
கோல்ட் டஸ்ட்
ப்ரஷ்
செய்முறை:
முதலில் ஃபெவிக்கால், தண்ணீர் (1:3) என்ற விகிதத்தில் கலந்து வைத்துகொள்ளவேண்டும்.
மண்பானையின் மேல் டிஷ்யூ பேப்பர் வைத்து இந்த ஃபெவிக்கால் கலவையை சிறிது சிறிதாக பூச வேண்டும்.
முதலில் பானை முழுவதும் ஒட்டி நன்றாக காய்ந்ததும், அடுத்த லேயரை ஒட்ட வேண்டும்.
இப்பொழுது இந்த லேயரும் காயவைக்க வேண்டும்.
இந்த லேயர் காய்வதற்குள், நம்க்கு தேவையான டிசைனில் பூக்கள் செய்து வைத்துக்கொள்ளலாம்.
எம்சீலை எடுத்து இரண்டு கலவையும் நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை திலகம் போல் உருட்டி கத்தியில் நடுவில் கோடு போட்டால் பூக்களுக்கு இதழ்கள் ரெடி. இப்பொழுது சிறிது எடுத்து காம்பு,இலைகள் போண்றவற்றை செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது பானையும் காய்ந்துவிட்டிருக்கும். இதன் மேல் செய்து வைத்திருக்கும் பூக்களை ஒட்ட வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும்,
ஃபேப்ரிக் கருப்பு கலரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து கலர் அடிக்க வேண்டும். லேசாக கலர் காய்ந்ததும் அங்கங்கே கோல்ட் டஸ்ட் தூவி டிஷ்யூ பேப்பரில் அனைத்து இடங்களுக்கும் ஒற்றி ஒற்றி எடுத்தால் அழகான கண்ணை கவரும் பானை ரெடி.பூக்களுக்கு மட்டும் நான் கோல்ட் கலர் கொடுத்திருக்கேன்.
Labels:
potpainting
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பொறுமையின் சிகரமே நீ வாழ்க வளர்க.. :-)
எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது. 'பானை பிடித்தவள் பாக்கியசாலி'.
வாழ்த்துக்கள்.
அழகான கண்ணை கவரும் பானை
super.
//
தமிழ்ப்பறவை கூறியது...
பொறுமையின் சிகரமே நீ வாழ்க வளர்க.. :-)
எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது. 'பானை பிடித்தவள் பாக்கியசாலி'.
வாழ்த்துக்கள்.//
நன்றி பரணி...
//கடையம் ஆனந்த் கூறியது...
அழகான கண்ணை கவரும் பானை
super.//
நன்றி ஆனந்த்.
சூப்பரா இருக்கு தர்ஷினி!
thanks Asma..
அழகான வேலைப்பாடு.. நல்லாருக்குங்க.
Post a Comment