King Tut
Saturday, July 18, 2009
Tuesday, July 14, 2009
கிளாஸ் பெயிண்டிங் 6
தேவையான பொருட்கள்:
க்ளாஸ் 1
க்ளாஸ் அவுட்லைனர்
கருப்பு ஃபேப்ரிக் கலர்
ப்ரஷ்
அலுமினியம் ஃபாயில்
செய்முறை:
முதலில் க்ளாஸை நன்றாக கழுவி காயவைத்துக்கொள்ளவும். காய்ந்ததும் தேவையான படத்தை அவுட்லைன் வரைந்து, பின்புறம் திருப்பி அவுட்லைன் கொடுத்த இடத்தை தவிர மீதி இடங்களில் கருப்பு ஃபேப்ரிக் கலர் திக்காக கொடுத்து காய்ந்ததும், அலுமினியம் ஃபாயில் பேப்பரை கசக்கி (இதுவும் பின்புறம்)ஃப்ரேம் செய்யவும்.
Monday, July 13, 2009
potpainting3
பானை அலங்காரம் 3
தேவையான பொருட்கள்:
மண்பானை 1
சிவப்பு எனாமல் கலர் 50மில்லி
வார்னிஷ்
செராமிக்பவுடர்
ஃபெவிக்கால்
தண்ணீர்
பாலித்தீன் கவர்
கத்தரிக்கோல்
ரங்கோலி கலர் பவுடர்
கண்ணாடி உருண்டை வடிவம்
கோல்டன் கலர் 3டி அவுட்லைனர்.
செய்முறை:
முதலில் பானையை கழுவி காயவிடவும்
காய்ந்ததும் சிவப்பு எனாமல்கலர் அடித்து காய்ந்ததும் மறுபடி இன்னொரு கோட் அடிக்கவும் அப்பொழுதுதான் ஷைனிங்காக இருக்கும்.
பாலித்தீன் கவரை கோன்போல் செய்துக்கொள்ளவும்.
செராமிக்பவுடரில் தேவையான கலர்பவுடரை சேர்த்து ஃபெவிக்கால்விட்டு கலந்துகொள்ளவும் மேலும் பேஸ்ட் போல் வருவதற்கு தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதை கோனுக்கு மாற்றி டேப் போட்டு ஒட்டவும்.
கோனில் சிறு ஓட்டை போட்டு டிசைனை வரையலாம்.இந்த பானையில் முதலில் உருண்டை வடிவம் வரைந்து அதன் மேலும் கீழும் அவுட்லைன் போடவும், மேலும்
கற்பனைக்கு ஏற்றவாரு டிசைன் செய்து, ரவுன்ட் ஷேப்பில் கண்ணாடி பதித்து சுற்றி கோல்டன் க்ளிட்டர் கலரை அவுட்லைன் கொடுக்கவும்.
முழுவதும் முடிந்து காய்ந்ததும் வார்னிஷ் அடிக்கவும்.இதனால் இன்னும் ஷைனிங்காக இருக்கும்.
பானை அலங்காரம் 2
தேவையான பொருட்கள்:
மண்பானை 1
கறுப்பு எனாமல் கலர்
ப்ரஷ்
செராமிக் பவுடர்
பாலித்தீன் கவர்(கோன் செய்ய)
வார்னிஷ்
ஃபெவிக்கால்
தண்ணீர் சிறிது
வேஸ்ட் துணி
செய்முறை:
பானைக்கு கறுப்பு எனாமல் கலர் அடித்து காயவிடவும். செராமிக் பவுடரில் ஃபெவிகாலை சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்திமாவுபததிற்கு வந்ததும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலக்கவும் இப்பொழுது பாலித்தீன் கவரை கோன்போல் செய்த்துக்கொண்டு அதில் இந்த கலவையை ஊற்றி ரப்பர் பேண்ட் போட்டு கட்டவும். அல்லது பின் செய்து செல்லோடேப்பால் ஒட்டவும்.
பானை காய்ந்ததும் எனாமல் பெயின்ட் காய்ந்ததும் கோனை உபயோகப்படுத்தி நம் கற்பனைக்கு ஏற்றவாரு படத்தை வரைந்துகாய்ந்ததும் வார்னிஷ் அடித்து அலங்கரிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)