Friday, October 10, 2008

ரோஜாபூக்கள்



தேவையான உபகரணங்கள்
கம்பிகள்
நூல்
ஆர்கண்டி துணி (விரும்பிய நிறத்தில்)
பச்சை செல்லோடேப்
கத்தரிகோல்
பிளாஸ்டிக் இலைகள்

செய்முறை
முதலில் துணியை முதல் படத்தில் உள்ளவாறு வெட்டிக்கொள்ளவேண்டும்.(ஒரு ரோஜாவிற்கு ஆறு துண்டுகள்)
பின்பு ஓரங்களில் சுருட்டிக்கொள்ள வேண்டும் (குச்சி வைத்து).
நடுவில் மட்டும் ஒரு துண்டை மடித்து நூலில் கட்ட வேண்டும்.
மீதியுள்ள இதழ்களை ரோஜாபூக்கள் மாதிரி அடுக்கி நூலில் இறுக்கி கட்ட வேண்டும்.
பின்பு பிளாஸ்டிக் இலைகளை இணைக்கவேண்டும்.
இதேபோல் மீதியுள்ள ரோஜாக்களையும் செய்தபிறகு காம்பிற்கு கிரீன் செல்லோடேப் ஓட்ட வேண்டும்.

Thursday, October 9, 2008

அன்புள்ள அம்மாவிற்கு .......




இது நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொது எழுதிய முதல் கவிதை.

அன்னை

ஒவ்வொரு வார்த்தைக்கும்
பொருள் தேடினேன்
எனதுஅகராதியில்
ஆனால்
அன்பிற்கு மட்டும்
பொருள் இல்லை
அன்னையென்று ...

Wednesday, October 8, 2008

கிளாஸ் பெயிண்டிங்-1



தேவையான உபகரணங்கள்:
ஜூஸ் டம்ப்ளர்- 1
ப்ளாக் அவுட்லைனர்
கிளாஸ் கலர்ஸ்
ப்ளேடு (அல்லது) கத்தி

செய்முறை:
முதலில் ஜூஸ் டம்ப்ளரை நன்றாக கழுவி காயவைக்கவும்.பின்பு ஒரு பேப்பர் (அல்லது)சார்ட்டில்
தேவையான படத்தை வரைந்து தம்ப்லரின் உள்ளே செல்லோ டேப்பால் ஓட்ட வேண்டும் (வரைபடம் வெளிப்புறம் தெரியுமாறு)
பிளாக் அவுட்லைனரை கொண்டு படம் முழுவதும் வரைய வேண்டும்
அங்கங்கே அதிகமா விழுந்திருகும் அதை நன்றாக காய்ந்த பிறகு ப்ளேடு ,கத்தி கொண்டு சரிசெய்யவும்.
பிறகு தேவையான நிறங்களில் (கிளாஸ் கலர்ஸ் ) கொண்டு கலர் கொடுக்கவும்.
செங்குத்தாக இருப்பதால் கலர் கிழே வழியும் எனவே ரூம் ஹீட்டர் (அல்லது)காஸ் அருகே சிறிது நேரம் வைத்திருந்து பின் உள்ளே ஒட்டிய படத்தை எடுத்துவிடவும்.

LinkWithin

Blog Widget by LinkWithin