Tuesday, July 28, 2009
பேப்பர் ஃப்ளவர் 1
பேப்பர் ஃப்ளவர் 1
தேவையான பொருட்கள்:
ஏ4 பேப்பர் 3
தேவையான கலர்
தண்ணீர்
ஃபேப்ரிக் க்ளூ
கத்தரிக்கோல்
நூல்
பருத்தி
க்ரெப் பேப்பர்(பச்சை)
கோல்டன்வொயர்
ப்ரஷ்
பச்சை ஃப்ளோரல் டேப்
அலங்கரிக்க தேவையான வேஸ்(அ) க்ளாஸ்
செய்முறை:
முதலில் ஏ4 பேப்பரில் பெரிய அளவிலான வளையல் வைத்து வட்ட வடிவம் வரைந்துக்கொள்ளவும்.(20 அ 25) அதை அழகாக வெட்டி வைத்துக்கொண்டு,தேவையான கலரில் சிறிது தண்ணீர் சேர்த்து பேப்பரில் அடிக்க வேண்டும்(மெதுவாக செய்யவேண்டும் இல்லையெனில் பேப்பர் அடியில் உள்ளதுடன் ஒட்டிகொண்டு கிழிந்துவிடும்)அனைத்திற்கும் கலர் கொடுத்து காய்ந்ததும் மறுபடியும் பின்புறம் திருப்பி அதேபோல் கலர் அடித்து காயவிடவும் காய்ந்ததும் படத்தில் உள்ளது போல் இரன்டாகவும், பின்பு அதையும் இரன்டாக மடித்து மறுபடியும் இருபுறமாக மடித்து மேலே சிறிது யூ வடிவில் வெட்டி அதை பிரித்தால் அழகான மலர் கிடைக்கும்.அதை மீன்டும் படத்தில் உள்ளது போல் வெட்டி ஃபேப்ரிக் க்ளூ வைத்து கேப் இல்லாதவாறு ஒட்டவும்.இப்பொழுது பூ ரெடி.காம்பிற்கு கோல்டன் ஒயரை தேவையான அளவு வெட்டி அதன் நுனியில் பருத்தி வைத்து பட்போல் சுற்றி அதன் மேல் க்ரீன் க்ரெப் பேப்பரை சுற்றி நூல் போட்டு கட்டவும்.இப்பொழுது செய்து வைத்துள்ள பூவை கம்பியின் கீழ்வழியாக மேலே இழுத்து விடவேன்டும். கம்பியில் க்ரீன் ஃப்ளோரல் டேப்பை சுற்றிவிடவும்... அழகான பொக்கே (அ) ஃப்ளோரல் வேஸ் ரெடி...
Labels:
paperart
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ரொம்ப நல்லாயிருக்கு தர்ஷினி
நல்லாயிருக்கு
நன்றி மிஸஸ். ஃபாயிஸா..
நன்றி கடையம் ஆனந்த்..
கற்றவை பகிர்வதால் காசினி செழிக்கும் என்று
உற்ற பொழு தொதுக்கி உயரிய படைப்பெல்லாம்
பெற்றுவக்க எமக்கு வழங்கி களிக்கும் தர்ஷினி
நெற்றியில் நிற்குதெம் புருவம்
நன்றி நேசமித்திரன்..
நல்லாயிருக்கு.
இதுவே என் முதல் வருகை.
நன்றி வண்ணத்துபூச்சியார்... முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
எனது தளத்தில் தங்கள் வருகை கூறும் காலடி கண்டேன், வந்தேன். இது எனது முதல் வருகை. உங்கள் பக்கங்களின் வடிவமைப்பு மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
நன்றி நையான்டி நைனா உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்..
நேத்து நன் எழுதிய எராஸ்மஸ் பதிவிற்கு நீங்கள் தான் வாக்களித்ததா? . ஆமாம் என்னங்க உங்க ப்ளாக் வந்த தன்னாப்புல பாட்டு படிக்குது , ஒரே மெர்சலா இருக்கு
//Prakash கூறியது...
நேத்து நன் எழுதிய எராஸ்மஸ் பதிவிற்கு நீங்கள் தான் வாக்களித்ததா? . ஆமாம் என்னங்க உங்க ப்ளாக் வந்த தன்னாப்புல பாட்டு படிக்குது , ஒரே மெர்சலா இருக்கு//
நன்றி ப்ரகாஷ்...
Hey Dharshini..it is too gud.. :).but i cannot understand even single word.. :)
ரொம்ப அருமையா இருக்கு தர்ஷினி
thanks kiran...
நன்றி ஜலீலா...
Post a Comment