Thursday, April 16, 2009

எம்பாஸ் பெயின்டிங் 2


இந்த பெயிண்ட் சற்று வித்யாசமாக மெட்டாலிக்கலர், பியர்ல்கலரில் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது. நீங்களும் முயற்சித்து பாருங்கள். வாழ்த்துக்கள்.

தேவையான பொருட்கள்:

எம்பாஸ் சொல்யூஷன்
பியர்ல் கலர்ஸ்
மெட்டாலிக் கலர்ஸ்
எம்பாஸ் கலர்ஸ்
ப்ரஷ் 0, 2
வெல்வெட் துணி 1 மீட்டர்
வரைவதற்கு தேவையான ஃபோட்டோ டிசைன் 1
மஞ்சள் கார்பன்
அயர்ன்பாக்ஸ்


செய்முறை:

முதலில் வெல்வெட் துனியில் தேவையான படத்தை மஞ்சள்கார்பன் வைத்து ட்ரேஸ் செய்து கொள்ளவும்(ராஜஸ்தானி ஃபோட்டோஸ் பொருத்தமாக இருக்கும் அ பூக்கூடை டிசைனும் நன்றாக இருக்கும்)ட்ரேஸ் செய்த இடத்தில் எம்பாஸ்சொல்யூஷனை தடவி 24 மணி நேரம் காய விடவும், காய்ந்த்ததும் பின்புறம் திருப்பி அயர்ன் செய்யவும். இப்பொழுது சற்று மேலெழும்பி(எம்பாஸ்)இருக்கும்.
இப்பொழுது இதில் பொருத்தமான கலரை தேர்ந்தெடுத்து பெயின்ட் செய்யவும்.உ.ம் நகைகளுக்கு மெட்டாலிக் கோல்ட், பியர்ல் நகைகளுக்கு சில்வர் இவ்வாறு படத்திற்கு தகுந்த்தபடி வர்ணம் கொடுக்கவும். வர்ணம் காய்ந்ததும்(7,8 மணி நேரம்)கழித்து மறுபடியும் அயர்ன் செய்து ஃப்ரேம் போட்டு வீட்டை அலங்கரிக்கலாம்.இந்த பெயிண்ட் எம்பாஸ் ஆகி இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும்.






16 comments:

Anonymous said...

நான் தான் முதல்

Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்குங்க. செய்முறை விளக்கமும் அருமை. உங்களின் உழைப்பும், திறமையும் பெயிண்டிங்கில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

Sasirekha Ramachandran said...

excellenta irukku....nice color combination.

Sasirekha Ramachandran said...

idhu readymade pack kedakkudhulla?

thamizhparavai said...

எக்ஸலண்ட்...படிப்படியாக ஓவியம் உருவான விதம் படங்களுடன் கொடுக்கப் பட்டிருப்பது உங்கள் டெடிகேஷனைக் காட்டுகிறது. இவ்வளவு செய்யப் பொறுமை இல்லை என்பதால் இப்போதைக்கு உங்கள் மேல் கொஞ்சம் பொறாமை அவ்வளவே...

குசும்பன் said...

அருமையாக இருக்கு!

Thamira said...

உங்கள் பெரும்பாலான பதிவுகள் ஓவியம் குறித்ததாகவும், அதைக் கற்பித்தல் குறித்ததாகவும் இருக்கிறது. நெட்டில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வண்ணம் பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்.

dharshini said...

நன்றி கடையம் ஆனந்த்....

நன்றி சசிரேகாராம்ச்சந்திரன்..
//idhu readymade pack kedakkudhulla?//
ஆமாம் ரெடிமேடாக கிடைக்கிறதுsasireka.

நன்றி தமிழ்பறவை(பொறாமையா?!)
நன்றி குசும்பன் மற்றும் ஆதி அண்ணா.

Raju said...

ரொம்ப நல்லாயிருக்குங்க.

vaasal said...

உங்கள் திறமைகள் உங்களுக்கு மேலும் வளமும், நலமும் சேர்க்கட்டும். உங்கள் கலைத்திறனும், படைப்புத்திறனும் வெற்றி வாசல் திறக்கட்டும். வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

//நீங்களும் முயற்சித்து பாருங்கள். வாழ்த்துக்கள்.//

hihihihi..

its really good...

ஆதவா said...

இதைப் போன்று என் தந்தை செய்ததாக நினைவு....

மிக்க அருமைங்க... நான் இப்போல்லாம் இம்மாதிரி முயற்சிப்பதே கிடையாது... நேரமெல்லாம் சுத்தமா கிடையாது!

கிட்டத்தட்ட இதே முறையில் டெக்ஸ்டைல் பிரிண்டிங் முறைகளுக்கு Hi-density Prints, Puff Prints என்று சொல்வார்கள்.

dharshini said...

நன்றி டக்ள்ஸ் அண்ணா.

உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வாசல்..

நன்றி கார்கி அண்ணா.

// கிட்டத்தட்ட இதே முறையில் டெக்ஸ்டைல் பிரிண்டிங் முறைகளுக்கு Hi-density Prints, Puff Prints என்று சொல்வார்கள்.//
நன்றி அண்ணா மேலும் எனக்கு இதை பற்றி தெரியாது.

வால்பையன் said...

படத்தை மேலிருந்து கீழாக போடுவதற்கு பதிலாக கீழிருந்து மேலாக போட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்!

தலைகீழா இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்க்!

dharshini said...

நன்றி வால்பையன் உங்கள் கருத்திற்கு..
அடுத்த முறைதிருத்திக்கொள்கிறேன்..

Unknown said...

மிகவும் அருமையாக இருக்கு தர்ஷினி

LinkWithin

Blog Widget by LinkWithin