Tuesday, March 31, 2009
க்ளாஸ் பெயிண்டிங் 5
க்ளாஸ் பெயிண்டிங் 5
இந்த க்ளாஸ் பெயின்டிங்கை கொஞ்சம் வித்யாசமாக ஸ்டோன்களை வைத்து ட்ரை பண்ணியிருக்கேன். நன்றாக வந்தது.
தேவையான உபகரணங்கள்:
கிளாஸ் (stained glass)
ப்ளாக் அவுட்லைனர்
கிளாஸ் கலர்ஸ்
ப்ளேடு (அல்லது) கத்தி
அலுமினியம் ஃபாயில்
வரைபடம்(தேவையான டிசைன்)
குந்தன் ஸ்டோன்ஸ்(பூக்களுக்கு)
ஃபெவிக்கால்
செய்முறை:
முதலில் கிளாசஸை நன்றாக கழுவி காயவைக்கவும்.பின்பு ஒரு பேப்பர் (அல்லது)சார்ட்டில் தேவையான படத்தை வரைந்து கிளாஸின் அடியில் செல்லோ டேப்பால் ஓட்ட வேண்டும் (வரைபடம் வெளிப்புறம் தெரியுமாறு)
பிளாக் அவுட்லைனரை கொண்டு படம் முழுவதும் வரைய வேண்டும்
அங்கங்கே பிளாக் அவுட் லைனர் அதிகமா விழுந்த்திருக்கும் அதை நன்றாக காய்ந்த பிறகு ப்ளேடு ,கத்தி கொண்டு சரிசெய்யவும்.பிறகு உள்ளே ஒட்டிய படத்தை எடுத்துவிடவும். தேவையான நிறங்களில் (கிளாஸ் கலர்ஸ் ) கொண்டு கலர் கொடுக்கவும்.கலர் காயிந்த பிறகு பூக்கூடைகளில் பூக்களுக்கு பதில் ஸ்டோன்களைஃபெவிக்கால் வைத்து ஒட்டவும்.பின் தூசி படாத இடத்தில் வைத்து 6 (அ) 7 மணி நேரம் காயவைக்கவும்.
அலுமினியம் ஃபாயில் பேப்பரை லேசாக கசக்கி கிளாசின் பின்புறம் வைத்து ஃப்ரேம் செய்யவும்.
Labels:
glasspainting
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இவ்வளவு பொறுமையாக உருவாக்கியதற்கு முதல் வாழ்த்து.
கண்ணாடி தேவதை அழகாக இருக்கிறாள்.
நீங்க நினைக்கிறமாதிரி இது கஷ்டமெல்லாம் இல்லீங்க.
எல்லாமே நீங்களா பண்ணுனீங்க!
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் தர்ஷினி.
நன்றி டக்ள்ஸ் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
அருமையான படைப்பு...
உங்களை எடுத்துகாட்டாக சொல்லி... பலரையும் ஊக்குவிக்கலாம்...
மிக்க நன்றி...
கற்று கொள்ள துடிக்கும் சகோதரிகளுக்கு மிகவும் உதவும்...
உங்கள் அனுமதியோடு... உங்கள் படைப்புகளை குழந்தைகளை ஊக்குவிக்க பயன்படுத்தி கொள்கிறேன்.
Post a Comment