Thursday, July 9, 2009

குந்தன் பூச்செடி





தேவையான பொருட்கள்:

கலர் குந்தன்கள்
கோல்டன்கலர் கம்பிகள்
செயற்கை இலைகள்
அலங்கரிக்க பூச்சாடி
ஃப்ளோரல் டேப்
கத்தரிக்கோல்
மகரந்தம் (தேவைப்பட்டால்)

செய்முறை:

முதலில் கோல்டன் நிற கம்பிகளை தேவையான அள‌விற்கு ஒரே அளவாக 5 கம்பிகளை வெட்டிகொள்ளவும்.
குந்தன் கற்களில் இரு ஓட்டைகள் இருக்கும், முதல் ஓட்டையில் கம்பியை நுழைத்து வெளியே இழுத்து முறுக்கி விடவும். பின் இன்னொரு ஓட்டையில் கம்பியை நுழைத்து காம்பாக இழுக்கவும். இவ்வாறு ஒவ்வொரு பூவுக்கும் 5 கற்களில் இதேபோல் செய்து ஒன்றாக பூ போல் இணைக்கவும். (தேவையானால் மகரந்தத்தை இணைக்கவும்.)15 அ 20 பூக்கள் செய்தபிறகு கம்பியில் ஃப்ளோரல் டேப்பை சுற்றி இலைகளையும் பூக்களையும் இணைத்து செடிபோல் செய்து பூச்சாடியில் அலங்க‌ரிக்கவும்.





Wednesday, June 24, 2009

potpainting1




தேவையான பொருட்கள்:

கறுப்பு எனாமல் கலர் 50 மில்லிலிட்டர்(black enamel)
மெட்டாலிக் காப்பர் கலர்(metalic copper)
செல்லோ டேப்
ப்ரஷ் (flat)
வார்னிஷ்
செயற்கை பூக்கள் அலங்கரிப்பதற்க்கு

செய்முறை:

முதலில் பானைக்கு கறுப்பு எனாமல் கலரை அடிக்க வேண்டும்.
அதன் மேல் படத்தில் காட்டியபடி செல்லோ டேப்பை ஒட்ட வேன்டும்.
இப்பொழுது ஒட்டிய செல்லோ டேப்பின் மேலும் சுற்றியுள்ள இடங்களிலும் மெட்டாலிக் காப்பர் கலரை அடிக்க வேண்டும். 5 நிமிடம் காய்ந்ததும் ஒட்டிய செல்லோ டேப்பை எடுத்து விட்டால் அழகான பானை ரெடி.இறுதியாக வார்னிஷ் அடித்து காய்ந்ததும் செயற்கை பூக்களை அலங்கரிக்க வேண்டும்.ஒட்டிய இடத்தில் மட்டும் பெயின்ட் இல்லாமல் பார்ப்பதற்கு ரிச்லுக்காக இருக்கும்.




LinkWithin

Blog Widget by LinkWithin