Friday, October 10, 2008

ரோஜாபூக்கள்



தேவையான உபகரணங்கள்
கம்பிகள்
நூல்
ஆர்கண்டி துணி (விரும்பிய நிறத்தில்)
பச்சை செல்லோடேப்
கத்தரிகோல்
பிளாஸ்டிக் இலைகள்

செய்முறை
முதலில் துணியை முதல் படத்தில் உள்ளவாறு வெட்டிக்கொள்ளவேண்டும்.(ஒரு ரோஜாவிற்கு ஆறு துண்டுகள்)
பின்பு ஓரங்களில் சுருட்டிக்கொள்ள வேண்டும் (குச்சி வைத்து).
நடுவில் மட்டும் ஒரு துண்டை மடித்து நூலில் கட்ட வேண்டும்.
மீதியுள்ள இதழ்களை ரோஜாபூக்கள் மாதிரி அடுக்கி நூலில் இறுக்கி கட்ட வேண்டும்.
பின்பு பிளாஸ்டிக் இலைகளை இணைக்கவேண்டும்.
இதேபோல் மீதியுள்ள ரோஜாக்களையும் செய்தபிறகு காம்பிற்கு கிரீன் செல்லோடேப் ஓட்ட வேண்டும்.

4 comments:

Ŝ₤Ω..™ said...

ஏனுங்கோ.. ஓடி போய் தெருமுனையில இருக்க அம்மாகிட்ட 5 ரூபா குடுத்தா 3 ரோஜா தருவாங்களே.. ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்??
ச்ச்சும்மா.. லுல்லாய்க்கு...
செய்முறை விளக்கம் நல்லா இருக்கு.. ஆனா செய்து பார்க்கத்தான் பொருமை இல்லை.. :(

சிவா சின்னப்பொடி said...
This comment has been removed by the author.
Sanjai Gandhi said...

வேற டெம்ப்லெட் மாத்துங்க.. கண்ணைப் பறிக்கும் கலர் குடுத்திருக்கிங்க.. படிக்க ஒரு மாதிரி இருக்கு.. அந்த கிரிக்கெட் ஸ்கோர் விட்ஜெட் கூட வேற மாத்தலாம்.. ஸ்க்ரால் ஆகாம சிம்பிளா நிறைய தகவலோட சில விட்ஜெட்ஸ் கிடைக்கிது...

நீங்க டீச்சரா? :)

முரளிகண்ணன் said...

நல்லா இருக்கே, முயற்சி செய்து பார்க்கிரேன்

LinkWithin

Blog Widget by LinkWithin